இந்தியாவில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டது

ஒமைக்ரான்

View this post in english-> First Omicron case Identified in India 

 

இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்திருக்கிறது.

ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவிடக்கூடாது என்று மக்கள் அணைவரும் அச்சப்பட்டு கொண்டிருந்த வேளையில் தற்போது இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பதிவாகியுள்ளது.

ஏற்கனவே கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இன்னும் இருந்து வரும் வேளையில் தற்போது தென்ஆப்ரிக்காவில் உருவான இந்த ஒமைக்கரான் தொற்றால் மக்கள் பாதித்து விடக்கூடாது என அனைத்து நாடுகளும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தடைந்த பயனிகளுக்கு தொற்று இருக்கிறதா இல்லையா என்று சோதனை செய்ததின் அடிப்படையில் இன்று இந்தியா வந்தடைந்த பத்து பயனிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது, மேலும் அவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கிறதா என்று சோதித்து பார்த்த நிலையில் அதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது மற்றும் 45 வயது உள்ள இரு ஆண்களுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

மேலும் அந்த பயனிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டரிந்து அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் தொற்று பரிசோதனை செய்யப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *